முழு ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு பயணமாகும் வடமாநில தொழிலாளர்கள்
முழு ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு பயணமாகும் வடமாநில தொழிலாளர்கள்
காட்பாடி
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலையை கட்டுப்படுத்த நேற்று முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சிறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் இரண்டு வாரம் முழ ஊரடங்கால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் தங்களின் சொந்த ஊர்களுக்கு ரெயில்களில் பயணிக்கின்றனர். அவ்வாறு பயணிக்கும்போது ரெயில்களில் இடமில்லை என்றாலும் படிக்கட்டில் அமர்ந்து செல்வதை காண முடிந்தது.
காட்பாடி வழியாக சென்ற ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தனர். மேலும் தொழிலாளர்கள் தினந்தோறும் தங்களுடைய ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story