ஊரடங்கால் தவித்த மூதாட்டி


ஊரடங்கால் தவித்த மூதாட்டி
x
தினத்தந்தி 11 May 2021 12:22 AM IST (Updated: 11 May 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் பஸ் கிடைக்காமல் மூதாட்டி தவித்தார்.

 வடகாடு:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகாடு பெண்கள் தங்கும் விடுதி அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து அவரிடம் பொதுமக்கள் விசாரித்ததில், நான் திருச்சியில் ஒரு உணவகத்தில் வேலை பார்ப்பதாகவும், தற்போது கொரோனா ஊரடங்கால் தனது சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் செல்ல புதுக்கோட்டை வரை பஸ்சில் வந்தேன். அங்கிருந்து, செல்ல பஸ் வசதி இல்லாத நிலையில் புதுக்கோட்டை போலீசார் லாரி ஒன்றில் ஏற்றி அனுப்பி வைத்தனர். டிரைவர் வடகாடு பகுதியில் இறக்கி விட்டு சென்றார். மேலும் அங்கிருந்து அவர் தனது ஊருக்கு செல்வதற்கு பஸ் எதுவும் இல்லாததால் வழியின்றி பரிதாபமாக நின்றார். இது பார்ப்போரை பரிதாப பட வைத்தது.

Next Story