இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 May 2021 7:46 PM (Updated: 10 May 2021 7:46 PM)
t-max-icont-min-icon

இருதரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு

மேலூர்
மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ளது ஆலம்பட்டி. இங்குள்ள பட்டைச்சாமி கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலம்பட்டியை சேர்ந்த சேதுராமன், இவரது மனைவி கவிதா, பாஸ்கரன், திருவலிங்கம், ராமநாதன் ஆகிய 5 பேர் மீது கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story