ஆட்டோ டிரைவர் தற்கொலை


ஆட்டோ டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2021 1:16 AM IST (Updated: 11 May 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்

நாகமலைபுதுக்கோட்டை
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(வயது 22). கார்த்திக்கின் தாயார் மரணமடைந்ததை தொடர்ந்து அச்சம்பத்து பாலாஜி நகரில் உள்ள அவரது அக்கா வீட்டில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். இந்தநிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனை தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story