பர்கூரில் தொடர்ந்து 2-வது நாளாக போலீசார் வாகன சோதனை: சொகுசு கார்- மினி லாரியில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
தொடர்ந்து 2-வது நாளாக பர்கூர் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சொகுசு கார் மற்றும் மினி லாரியில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து 2-வது நாளாக பர்கூர் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சொகுசு கார் மற்றும் மினி லாரியில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் இரவு அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஏட்டுகள் முருகன், தேவராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் மற்றும் மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
புகையிலை பொருட்கள் கடத்தல்
சோதனையின்போது சொகுசு கார் மற்றும் மினி லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து சொகுசு கார் மற்றும் லாரியில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் வேங்கடத்தானூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ஆறுமுகம் (வயது 42), அவருக்கு உதவியாக வந்த திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த அசாருதீன் (31), மற்றும் சொகுசு காரை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் தோரக்கன்பட்டி செல்லியாண்டிபாளையத்தை சேர்ந்த ஞானதீபன் (36) என்பதும், அவர்கள் கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து புகையிலை பொருட்களை திருச்சியில் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும்,’ தெரிய வந்தது.
கைது
இதைத்தொடர்ந்து ஆறுமுகம், அசாருதீன், ஞானதீபன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் அடங்கிய 15 மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 2-வது நாளாக பர்கூர் போலீசார் இந்த அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story