ஜவுளிக்கடையில் தீ விபத்து
ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது
மதுரை,
மதுரை தெற்கு மாசி வீதி மஞ்சணக்காரத் தெருவில் உள்ள ஜவுளிக்கடை. மூன்று தளங்களில் இயங்கி வருகிறது. நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த கடையில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மதுரை டவுன் மற்றும் தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். முதல் தளத்தில் முழுவதுமாக எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் மாடியில் உள்ள இரண்டு தளங்களும் தப்பியது. தீ விபத்து குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story