முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்
மதுரை
இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதிலும் நோன்பு நோற்பதோடு இரவு சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவர். ரமலான் மாதத்தின் கடைசி 10 இரவுகளில் ஒரு இரவில் இஸ்லாமியர்கள் புனித வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்ட தினமாக கருதப்பட்டு அன்றைய தினத்தை லைலத்துல் கத்ரு என்ற புனித இரவாக வழிபடுகின்றனர். ரமலான் மாதத்தின் 27-வது இரவான நேற்று இஸ்லாமியர்கள் இரவு முழுவதிலும் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த தடை உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு வீடுகளிலும், வீட்டு மாடிகளிலும் தொழுகை நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டனர். மதுரையில் மகபூப்பாளையம், காஜிமார் தெரு, நெல்பேட்டை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, எழுமலை, ஆனையூர், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கைகளை குலுக்காமல், ஒருவொருக்கொருவரும் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் மீண்டுவர வேண்டியும், உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
Related Tags :
Next Story