அம்மாபேட்டை அருகே ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபானத்தை பதுக்கி விற்ற பட்டதாரி வாலிபர் கைது
அம்மாபேட்டை அருகே மதுபானத்தை பதுக்கி விற்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்மாபேட்டை அருகே மதுபானத்தை பதுக்கி விற்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவுதை தடுக்கும் வகையில் மே 10-ந் ேததி முதல் வருகிற 24-ந் ேததி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதால், மதுபிரியர்கள் பலர் 2 வாரங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி வீட்டில் சேமித்து வைக்க விரும்பி டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.32 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனது.
தீவிர ரோந்து
இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் அருகே உள்ள ஜோதிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், ‘அவர் அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் ராஜ்குமார் (வயது 26), எம்.சி.ஏ. பட்டதாரியான அவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பெட்டி பெட்டியாக வாங்கி ஊரடங்கு காலத்தில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்ததுடன், அந்த பகுதியில் மறைவான இடத்தில் 53 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரத்து 79 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அம்மாபேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story