பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 590 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 55 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 645 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரைக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 35 ஆயிரத்து 346 பேருக்கும், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி ஆயிரத்து 957 பேருக்கும் என மொத்தம் 37 ஆயிரத்து 303 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.