கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் தா.பழூர் ஒன்றியம் காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் கவிதா விஜயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், அகிலா முன்னிலை வகித்தனர். தா.பழூர் அரசு மருத்துவர் அகிலா, செவிலியர் ஜெரால்ட் ஆகியோர் பொதுமக்களுக்கு உரிய பரிசோதனைகளை செய்து கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஊராட்சி செயலாளர் சுப்ரமணியன், மகளிர் குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் ரம்யா, பார்வதி, ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதேபோல் உடையார்பாளையத்தை அடுத்த ஜெ.தத்தனூர் ஊராட்சி த. பொட்டகொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், மருத்துவ அலுவலர் விக்னேஷ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story