முழு ஊரடங்கு அமல்; சேலத்தில் டாஸ்மாக் கடை திறந்திருந்ததால் பரபரப்பு
சேலத்தில் டாஸ்மாக் கடை திறந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ஊழியர்கள் காலை 10 மணிக்கு திடீரென வந்தனர். பின்னர் அவர்கள் கடையை திறந்து உள்ளே சென்றனர்.
டாஸ்மாக் கடை திறந்திருப்பதை அறிந்த மதுப்பிரியர்கள் சிலர் கடைக்கு விரைந்து சென்று மதுபானம் கேட்டனர். அதற்கு ஊழியர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கடையை திறக்க கூடாது. நாங்கள் கடையின் பூட்டு சரியாக உள்ளதா? என்று பார்த்து விட்டு கடையை பூட்டி சீல் வைக்க வந்தோம். இதையடுத்து கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர். முழு ஊரடங்கின் போது திடீரென்று டாஸ்மாக் கடை திறந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story