சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தும் மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தும் மையங்களில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தும் மையங்களில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
தனிமைப்படுத்தும் மையங்கள்
சேலம் தொங்கும் பூங்கா, ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி ஆண்கள் தங்கும் விடுதி ஆகிய இடங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கான தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களிலும், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவையும் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இதுகுறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமடைந்து வருகிறது. நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தும் மையங்களில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றின் தரம் குறித்தும், நோயாளிகளின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டன.
மருத்துவ உதவிகள்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி ஆம்புலன்ஸ் மற்றும் நேரில் வருபவர்களை உடனடியாக கண்காணித்து அவர்களின் நோய் தொற்றின் தன்மை குறித்து ஆய்வு செய்து தேவைப்படும் மருத்துவ உதவிகள் குறித்து விரிவாக நோயாளிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.
மேலும் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகம் மற்றும் தளவாய்ப்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது இணை இயக்குனர் (நலப்பணிகள்) மலர்விழி வள்ளல், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் முருகேசன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) செல்வக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story