சேலத்தில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேர் கைது


சேலத்தில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2021 2:25 AM IST (Updated: 11 May 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
சேலத்தில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
சேலத்தில் இருந்து நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் ஒரு மினி லாரியில் 2 பேர் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசார் மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
தீவிர விசாரணை
இதைத்தொடர்ந்து அந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், சேலம் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த சக்திமுருகன் (வயது 24), மாமாங்கம் பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (26) என்பதும், ரேஷன் அரிசியை நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மினிலாரி, 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ரேஷன் அரிசி வழங்கியது யார்? ரேஷன் கடையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story