டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்


டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 11 May 2021 2:32 AM IST (Updated: 11 May 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா நிவாரணத்தொகை வழங்குவற்காக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் உத்தரவுபடி  ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் நேற்று கொரோனா சிறப்பு நிவாரண தொகை வழங்குவதற்காக வீடுகள் தோறும் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. இந்த பணியை தாசில்தார் சரவணன் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன்படி ஒவ்வொரு ரேஷன் கடை பணியாளர்களும் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று தினமும் 200 பேருக்கு டோக்கன் வழங்குவர். இந்த பணிகளை வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன், வருவாய் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Next Story