வறண்ட கிணறுகளில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீா்


வறண்ட கிணறுகளில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீா்
x
தினத்தந்தி 10 May 2021 9:03 PM GMT (Updated: 10 May 2021 9:03 PM GMT)

வத்திராயிருப்பில் தொடர்ந்து மழை பெய்ததால் வீடுகளில் உள்ள வறண்ட கிணறுகளில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீா் ஊறியது.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் தொடர்ந்து மழை பெய்ததால் வீடுகளில் உள்ள வறண்ட கிணறுகளில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீா் ஊறியது. 
தொடர்மழை 
வத்திராயிருப்பு அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. 
இதனால் அணைகள், நீர்பிடிப்பு பகுதிகள், நீர்நிலைகள் என நீர்வரத்து பாதைகளில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வத்திராயிருப்பு அக்ரஹாரத்தில் பெரும்பாலான வீடுகளில் வீட்டிற்கு பின்புறம் கிணறுகள் அமைத்து உள்ளனர். 
 நிலத்தடி நீர் மட்டம் 
இந்த கிணறுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரின்றி வறண்டு கிடந்தன. தற்போது வத்திராயிருப்பு பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக வீடுகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் ஊற ஆரம்பித்து விட்டது. 
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 
வத்திராயிருப்பு பகுதியில் வீடுகளில் உள்ள கிணறுகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. 
இதனால் கிணறுகளை மூடும் சூழ்நிலையில் இருந்தோம். இந்தநிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் ஊற்று எடுத்து வர தொடங்கி விட்டது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம். தொடர்ச்சியாக மழை பெய்து கிணறுகளில் தண்ணீர் வந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story