முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 11 May 2021 2:44 AM IST (Updated: 11 May 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டி பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தாயில்பட்டி, 
ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, தாயில்பட்டி, மண்குண்டாம்பட்டி, முக்குரோடு ஆகிய  பகுதிகளில் முக கவசம் அணியாமல் யாரும் வருகிறார்களா என சாத்தூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சொர்ண மணி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்காணித்து அறிவுரை வழங்கினார். அத்துடன் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தார். ெகாரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு கூறிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் படி அவர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story