அம்பையில் ஊரடங்கை மீறியதாக 60 வழக்குகள் பதிவு
அம்பையில் ஊரடங்கை மீறியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அம்பை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் போலீசார் அம்பை பூக்கடை பஜார், ஆர்ச் பகுதி போன்ற இடங்களில் தீவிர வாகன சோதனை செய்தனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
அம்பை பகுதியில் ஊரடங்கை மீறியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 3 வணிக நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அம்பை நகராட்சி சார்பில் ஆணையாளர் பார்கவி, சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் ஆகியோர் அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
Related Tags :
Next Story