முழு ஊரடங்கி முன்னிட்டு அந்தியூரில் வாரச்சந்தை வெறிச்சோடிக் கிடந்தன
முழு ஊரடங்கி முன்னிட்டு அந்தியூரில் வாரச்சந்தை வெறிச்சோடிக் கிடந்தது.
அந்தியூர் வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் அவற்றின் விற்பனைக்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் உணவு பொருட்கள் காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள் இன்று முழு ஊரடங்கு அமல் படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரும் இன்றி வெறிச்சோடி கிடந்தன மேலும் அந்தியூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன மருத்துவமனை பால் பூத் அரசு அலுவலகங்கள் எப்பொழுதும் போல் திறக்கப்பட்டு இருந்தன கர்நாடக மாநிலத்தில் இருந்து பர்கூர் வழியாக அந்தியூர் ஈரோடு திருப்பூர் சங்ககிரி நாமக்கல் கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் தட்டகரை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு அனுப்பப்பட்டன உணவுப்பொருள் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டுவரக்கூடிய வாகனங்கள் மருத்துவமனைக்கு வரக்கூடிய ஆம்புலன்ஸ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் பவானி ரோட்டில் போலீசார் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அதே போல அவரின் நான்கு திசைகளிலும் முகாம் அமைத்து ஊரடங்கை கண்காணிக்க பணியில் ஈடுபட்டு இருந்தனர்
Related Tags :
Next Story