கலந்தாய்வு கூட்டம்


கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 11 May 2021 2:54 AM IST (Updated: 11 May 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவுவதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்தது.  இதையடுத்து கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், தாசில்தார் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.  வர்த்தக சங்க நிர்வாகிகள், காய்கறி மற்றும் மளிகை கடை உரிமையாளர்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் ஆர்.டி.ஓ. முருகேசன் கூறியதாவது:- 
பொதுமக்கள் நகர்ப்பகுதிகளில் கூடாமல் இருக்க மொத்த விற்பனை செய்யும் மார்க்கெட்டை நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட விசாலமான காலி இடத்திலும், சில்லறை வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்ய பழைய பஸ் நிலையத்தில் தற்காலிக செட்டுகள் அமைத்து விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story