முழு ஊரடங்கு காரணமாக ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விலக்கு அளிக்க விவசாயிகள் - வியாபாரிகள் கோரிக்கை
முழு ஊரடங்கு காரணமாக ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விலக்கு அளிக்க விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழு ஊரடங்கு காரணமாக ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விலக்கு அளிக்க விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சள் ஏலம்
ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனை நிலையங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மஞ்சள் விலை குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. தற்போது சராசரியாக குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விலை கிடைத்து வருகிறது.கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
இந்தநிலையில் தங்களிடம் இருப்பில் உள்ள மஞ்சள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட புது மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மஞ்சளை அறுவடை செய்தல், அதனை பதப்படுத்துதல், மஞ்சளை விற்பனைக்காக கிடங்குகளில் இருப்பு வைக்கவும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டு உள்ளது.
மார்க்கெட்டுக்கு விடுமுறை
இதுதொடர்பாக மஞ்சள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தற்போது அறுவடை செய்த புதிய மஞ்சளை பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மஞ்சள் கிருமி நாசினி என்பதால் மருந்து உற்பத்தி மற்றும் மளிகை தேவைக்கு தொடர்ந்து தடையின்றி அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்று முதல் வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் முதல் மஞ்சள் சந்தைக்கு விலக்கு அளித்து ஏலம் நடை பெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story