ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அரசு ஜீப்பை வீட்டுக்கு ஓட்டிச்சென்ற பஸ் டிரைவர்


ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அரசு ஜீப்பை வீட்டுக்கு ஓட்டிச்சென்ற பஸ் டிரைவர்
x
தினத்தந்தி 11 May 2021 3:19 AM IST (Updated: 11 May 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அரசு ஜீப்பை பஸ் டிரைவர் ஒருவர் வீட்டுக்கு ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அரசு ஜீப்பை பஸ் டிரைவர் ஒருவர் வீட்டுக்கு ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஸ் டிரைவர்
ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 44). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் அந்த வழியாக சென்ற ஒருவரின் உதவியுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று முடிந்த பிறகு, வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது காலில் கட்டு போடப்பட்டு இருந்ததால், தன்னை ஆம்புலன்சில் கொண்டு சென்று வீட்டில் விடுமாறு ஆஸ்பத்திரி பணியாளர்களிடம் கோவிந்தராஜ் கூறியுள்ளார். அதற்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், வாடகை கார் பிடித்து வீட்டுக்கு செல்லுமாறு அவர்கள் கூறியதாக தெரிகிறது.
அரசு ஜீப்
முழு ஊரடங்கு காரணமாக வீட்டுக்கு செல்வதில் சிரமம் உள்ளதாக அவர் கூறி உள்ளார். மேலும், ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்காததால், ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் ஆஸ்பத்திரியின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உண்டு உறைவிட மருத்துவ அதிகாரி பயன்படுத்தும் அரசு ஜீப்பில் ஏறி ஓட்டிச்சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி பணியாளர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்று சூரம்பட்டி நால்ரோடு அருகில் கோவிந்தராஜை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த ஜீப்பை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு வந்தனர். மேலும், கோவிந்தராஜை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story