திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலி; புதிதாக 869 பேருக்கு தொற்று


திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலி; புதிதாக 869 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 10 May 2021 10:35 PM GMT (Updated: 10 May 2021 10:35 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு நேற்று 11 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு நேற்று 11 பேர் உயிரிழந்தனர். நேற்று புதிதாக 869 பேருக்கு தொற்று உறுதியானது.

கிராம நிர்வாக அலுவலருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 869 பேருக்கு தொற்று உறுதியானது.

இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 2 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராம நிர்வாக அதிகாரி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 2-வது தடுப்பூசி கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி செலுத்தி இருக்கிறார். 2 மாதம் கழித்த நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளது. 

ஒரே நாளில் 11 பேர் பலி

தற்போது டாக்டர் ஆலோசனைப்படி, தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெறும் அவர், தன்னுடன் வாக்கு எண்ணும் பணியில் தொடர்பில் இருந்த சக ஊழியர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 30,276 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 4,667 பேர் உள்ளனர். 588 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 25,330 ஆகும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 75, 73, 70, 65, 52 வயதுடைய 5 பெண்கள் மற்றும் 73, 71, 70, 67, 65, 31 வயதுடைய 6 ஆண்கள் என நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர். 

இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 279 ஆக உயர்ந்தது. இதுவரை 6 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story