சாலை தடுப்பு வைத்து மூடல்


சாலை தடுப்பு வைத்து மூடல்
x
தினத்தந்தி 11 May 2021 6:44 AM IST (Updated: 11 May 2021 6:45 AM IST)
t-max-icont-min-icon

சாலை தடுப்பு வைத்து மூடல்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே சோலாடி கிராமம் உள்ளது. இங்குள்ள பொதுமக்களிடம், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் சளி மாதிரி சேகரித்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதில் 31 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் கூடலூரில் உள்ள கொரோான சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு அமீர் அகமது, பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமார், கூடலூர் ஒன்றிய ஆணையாளர் மோகன் குமாரமங்கலம், 

வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று சாலையில் தடுப்பு வைத்து கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்டு பகுதியாக அறிவித்தனர். மேலும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Next Story