வங்கிகளில் சமூக இடைவெளிவிட்டு காத்திருந்த வாடிக்கையாளர்கள்


வங்கிகளில் சமூக இடைவெளிவிட்டு காத்திருந்த வாடிக்கையாளர்கள்
x
தினத்தந்தி 11 May 2021 6:49 AM IST (Updated: 11 May 2021 6:50 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளில் சமூக இடைவெளிவிட்டு காத்திருந்த வாடிக்கையாளர்கள்.

ஊட்டி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டு வருகிறது. வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் உள்ளே கூட்டமாக கூடாமல் இருக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அதன்படி நுழைவுவாயில் முன்பு வாடிக்கையாளர்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் முன்பு வாடிக்கையாளர்கள் வங்கி சேவைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இது தவிர ஏ.டி.எம். மையங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து சென்றனர்.

Next Story