முழு ஊரடங்கையொட்டி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.15¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை.


முழு ஊரடங்கையொட்டி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.15¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை.
x
தினத்தந்தி 11 May 2021 8:05 AM IST (Updated: 11 May 2021 8:07 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.15 கோடியே 95 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளின் முன்பு நீண்ட வரிசையில் நின்று மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மது, பீர் வகைகளை வாங்கி சென்றனர்.

அதனால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக காணப்பட்டது. கடந்த 8-ந் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.13 கோடியே 85 லட்சமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 30 லட்சமும் என்று ரூ.20 கோடியே 15 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

ரூ.15¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

முழுஊரடங்கையொட்டி நேற்று முன்தினம் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்பதால் காலை முதல் மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகளின் முன்பு குவிந்தனர். பலர் பெட்டி, பெட்டியாக மது, பீர் வகைகளை வாங்கி சென்றனர். மாலை 6 மணி வரை பல கடைகளில் கூட்டம் காணப்பட்டது.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் ரூ.8 கோடியே 95 லட்சமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடி என்று மொத்தம் ரூ.15 கோடியே 95 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன. 



Next Story