ஆதரவற்றோர் உடலை அடக்கம் செய்வதற்கான நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்


ஆதரவற்றோர் உடலை அடக்கம் செய்வதற்கான நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 11 May 2021 8:09 AM IST (Updated: 11 May 2021 8:10 AM IST)
t-max-icont-min-icon

ஆதரவற்றோர் உடலை அடக்கம் செய்வதற்கான நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

காட்பாடி,

காட்பாடி ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில் மோதி இறந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ அவர்களது உடல்களை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள். 

அடையாளம் காணப்பட்ட உடல்கள் அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். அடையாளம் காணப்படாத உடல்களை ஆதரவற்றோர் உடல் என்றால் ரெயில்வே போலீசார் அடக்கம் செய்து விடுவர்கள். இதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. ஆதரவற்ற ஒருவரின் பிணத்தை அடக்கம் செய்ய ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த பணம் வருவதற்கு மிகவும் காலதாமதமாக வருவதாக ரெயில்வே போலீசார் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ரெயில் மோதி இறந்த அடையாளம் காணப்படாத உடலை ஆதரவற்ற உடல் என நாங்களே உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து விடுவோம். அதற்கு மத்திய அரசு கொடுக்கும் பணம் உடனே வந்து சேர்வதில்லை. மிகவும் காலதாமதம் ஆகிறது. இதனால் ஒரு ஆதரவற்ற பிணத்தை அடக்கம் செய்ய நாங்கள் பணத்தை போட்டு இறுதி மரியாதை செய்கிறோம். இதனால் ஆதரவற்றோர் பிணத்தை அடக்கம் செய்வதற்கான நிதியை உடனே வழங்கினால் நன்றாக இருக்கும், என்றனர்.

Next Story