மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
மதுரை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை நடத்தி வந்தவர் சரவணன். இவரது மனைவியின் ஸ்ரீநிதி. இவர்களுக்கு மகாலட்சுமி(10), அபிராமி(5) என்ற இரு மகள்களும், அமுதன்(5) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 20 வருடங்களாக நகைப்பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன். சில மாதங்களாகச் சரவணனுக்கு கடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என்று சரவணன் திணறியுள்ளார். இதனால் மன உலைச்சலில் அவரும் அவரது குடும்பமும் தவித்தனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கடன் பிரச்சனை கை மீறிச் சென்றதாகக் கருதிய சரவணனும் அவரது குடும்பத்தாரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் 5 பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளனர் என்று இவ்வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story