திருவள்ளூரில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு


திருவள்ளூரில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 11 May 2021 5:02 PM IST (Updated: 11 May 2021 5:02 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் கே.கே.நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்.

இவர் கடந்த 20-ந் தேதி அன்று அவரது வீட்டு மாடிப்படியில் ஏறி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story