27 பேருக்கு கொரோனா


27 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 May 2021 5:18 PM IST (Updated: 11 May 2021 5:18 PM IST)
t-max-icont-min-icon

நூல் மில்லில் 27 பேருக்கு கொரோனா

வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 73 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது கொரோனா தொற்று அதிகமாக பரவும் பகுதிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சென்று அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 வேலப்பன்நாயகன் வலசு ஊராட்சியில் இலுப்பைகிணறு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மில்லில் இருந்த 64 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது, இதையடுத்து சுகாதாரத்துறை, வருவாய் துறை சார்பில் நூல் மில்லுக்கு சென்று அங்கு இருக்கும் ஊழியர்களை பரிசோதித்தபோது 7 பேருக்கு கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 மீதி இருக்கும் 20 ஊழியர்களை  தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பின்னர் நூல் மில்லை ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா விதிமுறைகள் முறையாக கடைபிடிக்காததால் சுகாதாரத்துறை சார்பில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
------------------


Next Story