திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் வியாபாரிகள், போலீசார்


திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் வியாபாரிகள், போலீசார்
x
தினத்தந்தி 11 May 2021 12:23 PM GMT (Updated: 11 May 2021 12:23 PM GMT)

திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்படும் வியாபாரிகள், போலீசார்

திருவண்ணாமலை

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசால் நேற்று முன்தினம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில்  திருவண்ணாமலை மார்க்கெட் பகுதியில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானம் மற்றும் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை வெயில் கொளுத்தி வருகிறது. பகல் 12 மணி வரை தற்காலிக காய்கறி சந்தைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் தற்காலிக சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் போலீசார் ஒதுங்கக் கூட இடம் இல்லமால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். சில வியாபாரிகள் பெரிய குடை அமைத்தும், கையில் குடை பிடித்தும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 வெயிலால் காய்கறிகளும், பழங்களும் வாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வியாபாரிகள் மற்றும் போலீசாரின் நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story