மினிவேன் கவிழ்ந்து விபத்து


மினிவேன் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 11 May 2021 5:54 PM IST (Updated: 11 May 2021 5:54 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அணைக்கட்டு

பள்ளிகொண்டா அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 

கர்நாடகா மாநிலத்தில் இருந்து நேற்று இரவு மினி வேன் ஒன்று இஞ்சி ஏற்றிக்கொண்டு வேலூரை நோக்கி வந்துகொண்டிருந்தது. 

அந்த வேன்  வேலூரை அடுத்த பள்ளிகொண்டா அருகே உள்ள எஸ்.என். பாளையம் தேசிய நெடுஞ்சாலை வளைவில்  இன்று  அதிகாலை 3 மணக்கு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரையும் தாண்டிச்சென்று பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் அவருடன் வந்த ஒருவர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.

இந்த விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story