ஜோலார்பேட்டை அருகே தூக்குப்போட்டு மின் ஊழியர் தற்கொலை


ஜோலார்பேட்டை அருகே தூக்குப்போட்டு மின் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2021 6:01 PM IST (Updated: 11 May 2021 6:01 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே தூக்குப்போட்டு மின் ஊழியர் தற்கொலை

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராமம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது33). இவர் தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் உள்ள மின் வாரியத்தில், மின் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரிவா என்ற மனைவியும் 4 மாத மிதுன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. மேலும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவியை அவரது பெற்றோர் பிரசவத்திற்காக அழைத்துச்சென்றனர். 

கடந்த 9-ந் தேதி ஸ்ரீநாத் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி குழந்தைகளை பார்த்து விட்டு  மீண்டும் இரவு  தனது வீட்டிற்கு வந்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று அதிகாலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஸ்ரீநாத் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story