தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வேண்டுகோள்


தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 May 2021 6:03 PM IST (Updated: 11 May 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்காணிப்பு கேமரா
கோவில்பட்டி அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டி கிராம சுற்று வட்டார பகுதிகளில், அப்பகுதி பொதுமக்கள் சார்பாக புதிதாக 22 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியிலுள்ள சக்தி விநாயகர் கோவிலில் கண்காணிப்பு கேமரா கட்டுபாட்டு அறையும் உள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு கேமரா கட்டுபாட்டு அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, கண்காணிப்பு கேமரா செயல் பாட்டினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கினார். 
நிகழ்ச்சியில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி, நாலாட்டின்புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். 
இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
5 ஆயிரம் கேமராக்கள்
நக்கலமுத்தன்பட்டி கிராமத்தில் பெரியவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் இணைந்து 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர். இது போன்று கிராமங்கள் தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் நகரம் மற்றும் கிராமப்புற பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இது போன்ற நிகழ்வுகளை போலீஸ்துறை சார்பில் ஊக்கப்படுத்தி வருகிறோம். 
தடுப்பூசி போட வேண்டும்
அதே போன்று போலீஸ்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம், கொரோனா வைரஸ் 2-ம் கட்டமாக தீவிரமாக பரவிவருவதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பு ஊசி போடவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.  இந்த 2வாரம் மிக முக்கியமான காலகட்டம். இந்த 2 வாரமுழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனாவை விரட்டிவிட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story