நீர்வரும்பாதை தூர்வாரும் பணி
தாமரை குளத்திற்கு நீர்வரும்பாதை தூர்வாரும் பணி
அவினாசி
அவினாசிமங்கலம் ரோட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் தாமரைக்குளம் உள்ளது. மழைக்காலங்களில் அன்னூர் பகுதியிலிருந்து இந்த குளத்திற்கு மழைநீர் வந்து சேரும். இதனால் குளத்தை சுற்றி 5 கி.மீ. தூரத்துக்கு விவசாய பாசன வசதி பெறும். பல ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யாததால் குளத்திற்கு தண்ணீர்வரத்து இல்லாமல் குளம் காய்ந்து கிடக்கிறது. இந்த வருடமாவது பருவமழை பெய்து குளத்திற்கு தண்ணீர் வர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் நீர்வரத்துப்பாதை முழுவதும் செடி, கொடிகள் முட்புதர்களும் நிறைந்துள்ளது. மேலும் நீர்வழிப்பாதையில் பொதுமக்கள் வீடுகளிலிருந்து மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டோர் ஏராளமான குப்பைகளை கொட்டுவதால் நீர் வழிப்பாதை மறைந்துபோனது. எனவே நீர்வழிப்பாதையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் நீர்வரத்துப் பாதை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடந்துவருகிறது.
Related Tags :
Next Story