ஆழ்வார்திருநகரியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்


ஆழ்வார்திருநகரியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 11 May 2021 6:13 PM IST (Updated: 11 May 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தென்திருப்பேரை:
 தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் அறிவுறுத்தலின்படி ஆழ்வார்திருநகரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் வாகனங்களில் வீதி வீதியாக சென்று கொரோனா நோய் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது மக்கள் காரணமின்றி வெளியே செல்லக்கூடாது என்றும் , அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும,் மக்கள் எப்போதும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டுமென்றும் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் வெளியே திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,  காரணமின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story