மேலும் 444 பேருக்கு கொரோனா தொற்று
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர்,மே
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.
444 பேர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது. 20 ஆயிரத்து 932 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
2 ஆயிரத்து 376 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பால் மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பகுதிகள்
விருதுநகர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிசாமிக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ரோசல்பட்டி, புல்லலக்கோட்டை ரோடு, ஆமத்தூர், பர்மா காலனி, கூரைக்குண்டு, அகமதுநகர், லட்சுமி நகர், பாண்டியன் நகர், அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, ஆர்.எஸ்.ஆர்.நகர், தியாகராஜ நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி, பந்தல்குடி, செட்டிபட்டி, சாத்தூர், சிவகாசி, விஸ்வநத்தம், விளாம்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மகராஜபுரம், கான்சாபுரம், குன்னூர், நரிக்குடி, வீரசோழன், எம்.ரெட்டியபட்டி, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story