டாஸ்மாக் கடைகளுக்கு வெல்டிங் வைத்து பாதுகாப்பு


டாஸ்மாக் கடைகளுக்கு வெல்டிங் வைத்து பாதுகாப்பு
x
தினத்தந்தி 11 May 2021 9:14 PM IST (Updated: 11 May 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 76 டாஸ்மாக் கடைகளுக்கு வெல்டிங் வைத்து பாதுகாப்பு

ஊட்டி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள 76 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 

மேலும் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 24-ந் தேதி வரை மூடப்பட்டு இருப்பதால், கடைசி 2 நாட்களில் விற்பனை அதிகமாக நடந்தது. 

இதற்கிடையே டாஸ்மாக் கடைகள் உள்ளே மதுபானங்கள் இருப்பு உள்ளன. இதனால் பாதுகாப்பு கருதியும், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கவும் முன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

அதன்படி ஊட்டியில் உள்ள டாஸ்மாக் மது கடைகளின் இரும்பு ஷட்டர்களில் 2 கம்பிகள் குறுக்காக வைக்கப்பட்டு வெல்டிங் வைக்கப்பட்டு உள்ளது.

 அதேபோல் அனைத்து பாஸ்மாக் கடைகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மதுபானங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story