ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய கோவில்கள்
ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி கோவில்கள் வெறிச்சோடின.
தர்மபுரி:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு மையங்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை நாளில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடி சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். இதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆறு, இருமத்தூர் தென்பெண்ணை ஆறு ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஊரடங்கு காரணமாக அமாவாசை நாளான நேற்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. இதனால் அந்த கோவில் வளாகங்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் ஒகேனக்கல், இருமத்தூர் பகுதிகளிலும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நேற்று குறிப்பிடத்தக்க அளவில் கூடவில்லை.
Related Tags :
Next Story