பென்னாகரம் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை


பென்னாகரம் அருகே  கட்டிட மேஸ்திரி தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2021 9:48 PM IST (Updated: 11 May 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

பென்னாகரம்:
பென்னாகரம் அருகே உள்ள மேற்கு கள்ளிபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பழனிசாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story