ரெயிலில் சிக்கி ஆடு மேய்த்த தொழிலாளி பலி


ரெயிலில் சிக்கி ஆடு மேய்த்த தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 May 2021 9:48 PM IST (Updated: 11 May 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் சிக்கி ஆடு மேய்த்த தொழிலாளி பலியானார்.

சிவகாசி,மே
கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வழியாக சென்னை செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ெரயில் நேற்று மாலை 5.15 மணிக்கு திருத்தங்கல் ெரயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது ெரயில் நிலையம் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆலாவூரணியை சேர்ந்த ஜோதி (வயது 43) என்பவர் தன்னுடைய ஆடுகள் தண்டவாள பகுதியில் மேய்ந்து கொண்டிருப்பதை கண்டவுடன் அவற்றை விரட்ட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ெரயிலில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story