திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் தனி வார்டு கலெக்டர் கிரண் குராலா ஆய்வு

திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் தனி வார்டு கலெக்டர் கிரண் குராலா ஆய்வு
x
தினத்தந்தி 11 May 2021 9:53 PM IST (Updated: 11 May 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் தனி வார்டு கலெக்டர் கிரண் குராலா ஆய்வு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் இறப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வசதியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா  நேரில் பார்வையிட்டார். அப்போது பணியை விரைந்து முடிக்கவும், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் இருப்பு விவரங்களையும் மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story