ஆரணியில் தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி


ஆரணியில் தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 11 May 2021 10:50 PM IST (Updated: 11 May 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் தி.மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானார்கள்.

ஆரணி

தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் சுந்தரம் தெருவை சேர்ந்தவர் வி.டி.அரசு. தி.மு.க. முன்னாள் நகரமன்ற உறுப்பினர். இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 42), இவரும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர். சாமுண்டீஸ்வரிக்கு கடந்த 10 நாட்களாக உடல் நலம் பாதித்து சென்னை தனியார் மருத்துவமனைகளிலும், காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
 அவரது உடல் சொந்த ஊரான ஆரணி மயானத்தில் நகராட்சி ஊழியர்களை கொண்டு, சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி எரியூட்டப்பட்டது. 

முதியவர் சாவு

இதேபோல் ஆரணி அருணகிரி சத்திரம் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தயாளன் (71). இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

ஆரணி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் இறப்பவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாக்கும் வகையில் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Next Story