மின்சாரம் தாக்கி பெண் பலி


மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 11 May 2021 10:51 PM IST (Updated: 11 May 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த சண்முகநாதன் மனைவி நாகவள்ளி (வயது42).இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 6- ந் தேதி பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த அலுமினிய கட்டிட உபகரணம் அருகில் இருந்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story