மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேர் கைது
மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாயல்குடி,
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையிலான போலீசார் சாயல்குடி கன்னிராஜபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது வந்த தகவலின் பேரில் கன்னிராஜபுரம் அருகே உள்ள பிழை பொருத்தமன் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது34) என்பவரிடம் இருந்து 90 மது பாட்டில்களும் வேதமாணிக்கம் (46) என்பவரது வீட்டில் இருந்து 119 மது பாட்டில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் 2 பேரையும் கைது செய்த சாயல்குடி போலீசார், 209 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story