கொரோனா நோயாளிகள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை
வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ள கொரோ னா நோயாளிகள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிணத்துக்கடவு
வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ள கொரோ னா நோயாளிகள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா அதிகரிப்பு
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா 2-வது அலையில் தாக்கம் அதிகளவில் உள்ளது. பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிணத்துக்கடவு பகுதியில் மட்டும் இதுவரை 3 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 806 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 190 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்ற அனைவரும் உடல் நலம் பெற்று வீடு திரும்பி விட்டனர்.
இந்த பகுதியில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தொற்று ஏற்பட்ட பகுதிகளில் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
காய்ச்சல், தலைவலி, இருமல், சளி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று ஏற்பட்டு பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மாத்திரை மருந்துகள் சுகாதார துறை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் வெளியே நடமாடினால் நோய்த்தொற்று நடவடிக்கையின் கீழ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story