பொள்ளாச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


பொள்ளாச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 11 May 2021 11:21 PM IST (Updated: 11 May 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கம் தீவிரமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனை முன்னிட்டு பொள்ளாச்சியில் நேற்று முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் மதியம் 12 மணிக்கு மேல் தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிபவர்கள், வாகனங்களில் செல்பவர்களை நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர்.

 அப்போது தேவையின்றி வெளியே வந்தவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில், வால்பாறை, பொள்ளாச்சி தாலுகா பகுதியில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேற்று கோவை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு திடீரெனஆய்வு செய்தார். 

பொள்ளாச்சி-கோவை மெயின்ரோட்டில் உள்ள வடக்கிப்பாளையம் பிரிவு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் பாதுகாப்பு பணி குறித்து கேட்டறிந்தார். 

அப்போது அவ்வழியாக வாகனங்களில் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தி, தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.  

Next Story