சிற்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் போலீசில் மனு


சிற்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் போலீசில் மனு
x
தினத்தந்தி 11 May 2021 11:23 PM IST (Updated: 11 May 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

சிற்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் போலீசில் மனு அளித்தனர்.

விராலிமலை, மே.12-
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன்கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய சுமார் ரூ.4 கோடியில் நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் தார்சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையோரத்தில் பல்வேறு சுவாமி சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இருந்த சுவாமி சிற்பங்களை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி இருந்தனர். இது குறித்து விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் ஆலோசனையின் பேரில் நேற்று காலை விராலிமலை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமையில் கட்சியினர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடு்த்தனர். புகாரில் முருகன் கோவிலில் சிற்பங்களை சேதப்படுத்திய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story