துணியால் மூடப்பட்ட தலைவர்கள் சிலைகளை திறக்க கோரிக்கை
துணியால் மூடப்பட்ட தலைவர்கள் சிலைகளை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகாடு, மே.12-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அன்றில் இருந்து நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. அப்போது, தமிழகத்தில் உள்ள தலைவர்களது சிலைகள் துணியால் மூடப்பட்டன. தற்போது தேர்தல் முடிவடைந்து வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் பல இடங்களில் தலைவர்களது சிலைகளை மறைத்து மூடப்பட்டு இருந்த துணிகள் அகற்றப்படாமலேயே உள்ளது. வடகாடு மற்றும் மாங்காடு பகுதிகளில் உள்ள தலைவர்களது சிலைகளில் இருந்த துணி மற்றும் சாக்குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே துணியால் மூடப்பட்ட தலைவர்களது சிலைகளை திறக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story