கொரோனாவால் இறந்தவரின் உடலை உறவினர்களே அடக்கம்
கொரோனாவால் இறந்தவரின் உடலை உறவினர்களே அடக்கம் செய்தனர்
கீரமங்கலம், மே.12-
கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த 40 வயது வாலிபர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் மேல் சிகிச்சைக்கு அங்கே மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் பொறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறை ஊழியர்கள் இல்லாததால் உறவினர்களே சடலத்தை பெற்று சொந்த ஊருக்கு கொண்டு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமான குழி தோண்டி அடக்கம் செய்தனர். இந்த நிலையில் கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டதால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story