மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு + "||" + Boy dies after being struck by electricity

மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு

மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு
மதுரையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்
மதுரை
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகன் நகுல் (வயது 8). சம்பவத்தன்று செல்லப்பா வீட்டின் மேல் மாடியில் உள்ள தொட்டியில் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த நகுல் எதிர்பாராத விதமாக மோட்டாரின் வயரை தொட்டுள்ளான். அதில் மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டான். மயங்கி கிடந்த அவனை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது நகுல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. குளிப்பதற்கு வெந்நீர் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி கணவர் பலி காப்பாற்ற முயன்ற மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதி
குளிப்பதற்கு வெந்நீர் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி கணவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2. துணி காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி பலி
துணியை காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
5. மாத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
மாத்தூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்